ஜெர்மன் தனது படையினர் 4500 பேரை ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வைத்துள்ளது. இது ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்துள்ள அந்நிய நாட்டுப்பபடையினிரில் மூன்றாவது வரிசையில் உள்ளது.
செப்டம்பர் 4ல் ஜெர்மன் படையினர் நடத்திய தாக்குதலில் 69 போராளிகள் உட்பட 30 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்த போது, ஜெர்மனிய அப்பொழுது பாதுகாப்பு அமைச்சர் இருந்த ப்ரான்ஸ் ஜொஸப் ஜங் அதை மறுத்தார்.

ஆனால் கடந்த வியாழன் அன்று ஜெர்மன் பத்திரிகை ஒன்று 30 அப்பாவி மக்கள் ஜெர்மனியப் படைகளால் கொல்லப்பட்ட ஆதாரத்தை நிகழ்படம் மற்றும் இராணுவ ரகசிய கோப்புகளை வெளியிட்டது.

அதனால் அப்பொழுது ஜெர்மன் படையினருக்கு உயர் அதிகாரியாக பனியாற்றிய ஒல்ப்காங்க் ஸ்க்ன்டெர்ஹென் தனது இராஜினாமாவை சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் கர்ல் தியொடர் ஜு குட்டன்பெர்க் அவரது இராஜினாமாவை ஏற்று கொண்டதாக ஜெர்மன் பாராளுமன்றத்தில் வியாழன் அன்று அறிவித்தார்.