பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கிய அரசியல் கட்சியின் நிர்வாகிகள் அறிவிப்பு
Posted by salavu deen on Thursday, July 30, 2009

புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையிலான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியலில் சக்திப்படுத்தும் நோக்கில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா என்ற அரசியல் கட்சி இன்று டெல்லி பத்திரிகையாளர் சங்கத்தில் வைத்து பிரகடனப்படுத்தப்பட்டது.
ஈ.அபூபக்கர்(தலைவர்), வழக்கறிஞர் ஸாஜித் சித்தீகி(துணைத்தலைவர்), எ.ஸயீத்(பொதுச்செயலர்), முஹம்மது உமர்கான்(பொதுச்செயலர்), சி.ஆர்.இம்திஹாஸ்(செயலர்), மொய்தீன்குட்டி ஃபைஸி(செயலர்), ஃபவுஸியா கபீர்(செயலர்), இஸ்லாமுதீன் குரைஷி(பொருளாளர்)ஆகியோர் கட்சியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா உட்பட்ட மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத்தேர்தல்களில் அப்போதைய அரசியல் சூழலுக்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று கட்சியின் நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். கேரளாவில் எந்த கூட்டணியை ஆதரிப்பது என்பது பற்றி சூழ்நிலைகளை கணக்கில் எடுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது, "கட்சி உறுப்பினர்கள், கேடர்கள் என்று இரண்டுவிதமான அங்கங்கள் கட்சியில் இருப்பார்கள். கட்சியின் சட்டதிட்டப்படி கிளை கமிட்டியிலிருந்து தேசிய செயற்குழு வரை அதனுடைய நிர்வாக கட்டமைப்பு செயல்படும். பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, நகரம், மாவட்டம், மாநிலம் என அதனுடைய கமிட்டிகள் செயல்படும். கமிட்டிகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் 16 மாநிலங்களில் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் அக்டோபர் 18 ஆம்தேதி நடைபெறும் மாநாட்டிற்கு முன்பு மாநிலக்கமிட்டிகள் செயல்பட ஆரம்பிக்கும்." என்று அவர்கள் கூறினர். பத்திரிகையாளர் சந்திப்பில் மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இச்செய்தியின் தொடர்புடைய வீடியோவைக் காண இங்குக்ளிக் செய்யவும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இச்செய்தியின் தொடர்புடைய வீடியோவைக் காண இங்குக்ளிக் செய்யவும்.