முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜெ.அப்துல்கலாமிடம் அவருடைய மதிப்பைக்கருத்தில் கொள்ளாமல் உடல் பரிசோதனை நடத்திய அமெரிக்க விமானகம்பெனியான கான்டினன்டல் ஏர்லைன்ஸ் மன்னிப்புக்கேட்டது.தவறான புரிந்துணர்வின் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அதற்காக வருந்துவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.ஏற்கனவே இந்திய விமான போக்குவரத்துறை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் மீது வழக்குத்தொடர்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.